IAU Logo page 0001

   உள்விவகார அலகு பற்றி

சனாதிபதியின் செயலாளரால் 2025 பிப்ரவரி 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/SB/Circular/2/2025 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின்படி, சனாதிபதி அலுவலகத்தின் 'உள்விவகார அலகு' (IAU) 2025 ஜூன் 4 ஆம் திகதி முறைப்படி தாபிக்கப்பட்டுள்ளது.

உள் விவகார அலகின் முக்கிய நோக்கங்கள்

1.  நிறுவனத்தில் ஊழலைத் தடுத்து, நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல்.

2. நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்தல்; நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை உறுதிசெய்தல்.

3. நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை ஊக்குவித்தல்.

4.முறைகேடுகள் தொடர்பில் புகாரளிப்பதை ஊக்குவிக்கவும், தகவல் வழங்குபவர்களைப் பாதுகாக்கவும், இரகசியத்தன்மையைப் பேணவும் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குதல்.

5. சட்ட அமுலாக்க முகமைகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுடன் இணைந்து சட்ட அமுலாக்கத்திற்கு ஆதரவளித்தல்.

உள்விவகார அலகின் பொறுப்புகள் மற்றும் பணிகள்

1. நிறுவனத்திற்குள் உள்ள அமைப்புரீதியான தடைகளை அடையாளம் காண தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை ஆய்வு செய்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த அவற்றை எளிமைப்படுத்துதல்.

2. நிறுவனத்தில் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிய ஊழல் அபாய மதிப்பீடுகளை (CRAs) மேற்கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

3. நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, ஊழல் எதிர்ப்பு தொடர்பான குறிப்பிட்ட நோக்கங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கிய 'நிறுவன நேர்மைத்திறன் செயல் திட்டத்தை' உருவாக்கிச் செயல்படுத்துதல்.

4. நிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை 'தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேசிய ஊழல் எதிரப்பு இலக்குகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்தல்.

5. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் தேசிய மற்றும் சர்வதேச ஊழல் - தடுப்புச் சட்டங்களுக்கு அந்நிறுவனம் இணங்கிச் செயல்படுவதை மதிப்பிடுவதற்கும், மேம்பாட்டிற்கான பகுதிகளைக் கண்டறிவதற்கும் வழக்கமான இணக்கத்தன்மை ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

 6. அனைத்து அரச அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சொத்து அறிவிப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, CIABOC விதிமுறைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு இணங்க நல முரண்பாடுகளை நிர்வகித்தல்.

7. நிறுவனத்தில் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைகள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு பாதுகாப்பான அமைப்பை ஏற்படுத்தவும்; அத்தகைய புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அல்லது பிரிவுகளால் விரைவாகக் கையாளப்படுவதை உறுதி செய்யவும்; மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தொடர்ந்து கருத்துக்களை வழங்குதல். தேவைப்பட்டால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக, தொடர்புடைய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது தகவல்களை CIABOC-க்கு சமர்ப்பித்தல்.

8. நிறுவனங்களால் வழங்கும் சேவைகளை விவரிக்கும் பிரசைகள் சாசனத்தை உருவாக்கி வெளியிடல். 

9. அரச அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தரப்படுத்தப்பட்ட நடத்தை விதிகள் உட்பட, நெறிமுறை ஆளுகையை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்கி தாபித்தல்.

10. ஊழியர்கள் ஊழல் எதிர்ப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் வகையில், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல்.

11.தேசிய ஊழல் எதிர்ப்பு மற்றும் நேர்மைத்திறன் மதிப்பீட்டிற்கான நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படவும்; CIABOC மற்றும் தேசிய ஊழல் தடுப்பு உருவரைச்சட்டகத்தின் வழிகாட்டுதல்களின்படி, நேர்மைத்திறன் மதிப்பீட்டுச் செயல்முறைகளில் நிறுவனம் பங்கேற்பதையும் அவற்றுடன் இணங்கிச் செயல்படுவதையும் உறுதி செய்தல்.

12. அலகின் கடமைகளைச் செயல்படுத்தும்போது தொடர்ச்சியான வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெறுவதற்கு CIABOC உடன் தொடர்பைப் பேணல்.

13.  IAU வின் செயல்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முனெடுப்புக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் ஆகியவற்றைத் தொகுத்து, அவ்வப்போதும் மேலும் ஆண்டுதோறும் அறிக்கைகளைத் தயாரித்தல்.

14. நேர்மைத்திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த, தனியார் துறைப் பங்கீடுபாட்டாளர்களுடன் இணைந்து செயல்படுத்தல்.

News & Events

28
ஆக2017
රැස්වීම්

රැස්වීම්

பிரிவு நாள் கூட்டம் 2025.08.15 அன்று காலை 9.30...

28
ஆக2017
Others

Others

பிரதேச செயலகக் கலந்துரையாடல் 2025.07.01 அன்று வந்துரம்ப பிரதேச...

Scroll To Top